![]() |
அதன்படி, ஜூலை 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic மற்றும் உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான 'DoE' இனை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் விண்ணப்பதாரிகள் அந்தந்த பாடசாலை தலைமையாசிரியரிடம் அனுமதி பெற்ற பின்னரே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.