பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து !


வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாலபே ராகுல வித்தியாலயத்தில் இருந்து ரண்டம்பே நோக்கி மாணவர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

வரக்காபொல பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.