பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு.

(ரவிப்ரியா) 

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என்ற தொனிப் பொருளில்   பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய வளாகத்தில் ஞாயிறு(09) காலை முதல்  நடைபெற்ற இரத்தததான நிகழ்வில் பெருமளவு இளைஞர் யுவதிகள் பங்கேற்றனர். 

பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டிருந்தது. 

இரத்ததான நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு புனித அருளானந்தர் ஆலய பங்குத் தந்தை அருட்பணி அன்ரன் செறன்ஸ் றாகல் மற்றும் உதவி பங்குத்தந்தை அருட்பணி எச்.றிச்சேட்சன் ஆகியோர் ஒன்றிய தலைவர் செ.றொஷான் சகிதம் நினைவுப் பரிசு வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.