மின் கட்டணத் திருத்தம் – வாய்மூல கருத்துக் கோரல் இன்று !


2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான வாய்மூல கருத்துக் கோரல்கள் இன்று இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4.30 வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த கருத்துக் கோரல்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதற்காக பல்வேறுப்பட்ட மின் பாவனையாளர் குழுக்கள், கைத்தொழில் மற்றும் அமைப்புக்களை அங்கத்துவப்படுத்திய 50 பேர் பதிவு செய்துள்ளனர்.

பொதுமக்களின் கருத்து கோரல் நிறைவடைந்தன் பின்னர், ஆணைக்குழுவின் தீர்ப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.