முன்பிள்ளை மாணவர்களின்‌ கார்ட்டூன்‌ மோகம்‌ .


 முன்பிள்ளை மாணவர்களின்‌ கார்ட்டூன்‌ மோகம்‌


இன்றைய நவீன காலத்தில்‌ மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள்‌ புதிதாக உருவாக்கப்படுகின்றன. அதிலும்‌ குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால்‌ தயார்‌ செய்யப்பட்டு, ஊடுருவ செய்கின்ற கார்ட்டூன்‌ சேனல்கள்‌, வீடியோ கேம்கள்‌. செல்‌.'.போன்களில்‌ செயலிகள்‌ மூலமாக உருவாக்கப்படுகின்ற விளையாட்டூ கேம்கள்‌ இதுபோன்ற பலதரப்பட்ட முறைகளின்‌ வாயிலாக பலதரப்பட்ட பாதிப்புகள்‌ உலக அரங்கில்‌ பரவுகின்றன.

இதுபோன்ற கேம்கள்‌, கார்ட்டுன்‌ சேனல்கள்‌ வெறுமனே பிள்ளைகளின்‌ பொழுதுபோக்கிற்காகத்தான்‌ உருவாக்கப்பட்டூுள்ளது என்று நம்மில்‌ பலர்‌ நினைத்துக்‌ கொண்டு அதுபோன்ற காரியங்களை அனுமதித்து வருகின்றோம்‌. ஆனால்‌ குழந்தைகள்‌, மாணவர்கள்‌, இளைஞர்கள்‌ இதுபோன்ற பருவத்தில்‌ உள்ளவர்களின்‌ வாழ்க்கையையும்‌, சிந்தனைத்‌ திறனையும்‌ அழித்தொழிக்கின்றது. சமீப காலமாக மேலை நாட்டவர்களால்‌ செல்‌..போன்‌ செயலிகள்‌ மூலமாக பதிவேற்றம்‌ செய்யப்பட்டு விளையாடக்‌ கூடிய நூற்றுக்கணக்கான விளையாட்டுக்களை உலகம்‌ முழுவதும்‌ பரப்பி வெளியிடுகின்றார்கள்‌.

ஆனால்‌ தயார்‌ செய்யப்பட்டு வெளியிடுகின்ற விளையாட்டூக்களின்‌ பாதிப்புகளையும்‌, கேடுகளையும்‌ அறியாமலும்‌, உணராமலும்‌ இருந்து வருகின்ற காரணத்தினால்‌, இவற்றில்‌ குறிப்பிட்ட சில விளையாட்டுக்கள்‌ உலக அரங்கிலே மிகவும்‌ பிரசித்தி பெற்ற விளையாட்டாகவும்‌, மக்களிடத்தில்‌ நல்ல வரவேற்பை பெற்ற விளையாட்டாகவும்‌ வலம்‌ வந்து கொண்டிருக்கின்றது.

உதாரணமாக, “ப்ளு வேல்‌” என்ற விளையாட்டு ஆரம்பத்தில்‌ மக்களிடத்தில்‌ மிகவும்‌ வேகமாக பரவினாலும்‌, குறிப்பிட்ட சில நாட்களில்‌ மனிதர்களின்‌ உயிருக்கே மிகப்பெரும்‌ ஆபத்தை விளைவிக்கின்ற விளையாட்டாக மாறி, உலக அரங்கில்‌ பலர்‌ செத்து மடிந்து, பெருமளவில்‌ பிரச்சனைகளை கிளப்பி, “ப்ளு வேல்‌” என்ற விளையாட்டு நாளவில்‌ தடை செய்யப்பட்ட விளையாட்டாக ஆனது. ஆனால்‌ இந்த ப்ளு வேல்‌ விளையாட்டையெல்லாம்‌ பின்னுக்கு தள்ளி விட்டு உலக அரங்கில்‌ இளைஞர்களிடத்தில்‌ ஆக்கிரமித்திருக்கின்ற ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டூ தான்‌ பப்ஜி - பிளேயர்ஸ்‌ அன்நோன்‌ பேட்டில்கிரவுண்ட்‌ இந்த விளையாட்டில்‌ அப்படி என்ன தான்‌ இருக்கின்றது? என்று கேட்டால்‌, பல நபர்கள்‌ கூட்டமாக சேர்ந்து ஒருவர்‌ மற்றவரை சுட்டூத்‌ தள்ளுகின்ற விளையாட்டு தான்‌ ஆனால்‌ மற்ற கேம்களை போலல்லாமல்‌ பப்ஜி சுவாரஸ்யமான விளையாட்டு என்று தெரிவிக்கின்றனர்‌.

ஒரே நேரத்தில்‌ பல நூறு பேர்‌ உலகின்‌ வெவ்வேறு இடங்களில்‌ இருந்துகொண்டே இயர்போன்‌ வழியாக ஒருவரை ஒருவர்‌ தொடர்பு கொண்டு ஆன்லைன்‌ வழியாக விளையாடூம்‌ விளையாட்டூ பப்ஜியாகும்‌. சிலர்‌ ஆர்வக்‌ கோளாறின்‌ உச்சகட்டத்திற்கு சென்று, படிப்பதை மறந்து விட்டு மணிக்கணக்கில்‌ பப்ஜி விளையாட்டில்‌ மூழ்கி திளைக்கின்றனர்‌. சில ஆர்வக்‌ கோளாறுகள்‌ .'.போனில்‌ சார்ஜ்‌ தீர்ந்து போனாலும்‌, கைகளிலே பவர்‌ பேங்க்‌ உடனோ அல்லது சார்ஜ்‌ ஏற்றியவாறே விளையாடி பப்ஜி போதையில்‌ மூழ்கி விடுகின்றனர்‌.

மேலும்‌ நாளுக்கு நாள்‌ பப்ஜி விளையாட்டின்‌ மோகம்‌ அதிகரித்து பெருமளவிலான மக்கள்‌ பப்ஜி கேமை விளையாடூவதாகவும்‌ ஆய்வறிக்கைகள்‌ தெரிவிக்கின்றன. சுமார்‌ 30 கோடி பேர்‌ பப்ஜி விளையாட்டைப்‌ பதிவிறக்கம்‌ செய்துள்ளதாகவும்‌, ஒரே நேரத்தில்‌ உலகளவில்‌ சுமார்‌ 5 கோடி பேர்‌ விளையாடி வருவதாகவும்‌ புள்ளி விவரங்கள்‌ தெரிவிக்கின்றன.

இத்தகைய விளையாட்டுக்கள்‌ அதிகமானளவில்‌ பிள்ளைகள்‌ மத்தியில்‌ உலா வந்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிறு வயதில்‌ பிள்ளைகளின்‌ மனமானது முறையாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தால்‌ தான்‌ அவர்களின்‌ எதிர்கால கற்றல்‌ செயற்பாடுகள்‌ சிறப்பாக அமையும்‌ எனலாம்‌.

பிரதிகூலங்கள்‌

* தனித்துவிடப்படுகின்ற நிலை உருவாகும்‌.

* உடல்‌ உள விருத்தி பாதிப்படையும்‌

* மன அழுத்தம்‌ ஏற்படும்‌

* தூக்கமின்மை

* முரண்பாடுகள்‌ ஏற்படல்‌

* விரோதம்‌ போன்ற குணங்கள்‌ மனதளில்‌ உருவாதல்‌

* கல்வியின்‌ மீது ஈடுபாடின்மை

இத்தகைய நிலைப்பாடுகள்‌ பிள்ளைகள்‌ மத்தியில்‌ ஏற்பட பிரதான காரணமாக இருப்பதே பெற்றோர்கள்‌ என்றால்‌ அது மிகையல்ல அந்த வகையில்‌ பிள்ளைகளை சிறுவயதில்‌ இருந்தே அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுக்களின்‌ ஊடான கல்வி செயற்பாடுகளில்‌ ஈடுபட வழிவகுத்து தர வேண்டும்‌. கார்டுன்களிலும்‌ இணைய  விளையாட்டூக்களிலும்‌ தமது நேரத்தை பிள்ளைகள்‌ அதிகளவில்‌ செலவழிப்பதற்குண அவை பிள்ளைகளை ஈர்ப்பதுடன்‌ சுவாரஸ்யமாக அமைந்துள்ளமையே பிரதான விடயமாக பார்க்கப்படுகின்றது. அதனால்‌ அவர்களை ஈர்க்கும்‌ வகையில்‌ அமைந்த முன்பள்ளி செயற்றிட்டங்கள்‌ ஒழுங்கமைக்கப்பட வேண்டும்‌.

குழந்தைகள்‌ ஏன்‌ பாடசாலைக்கு செல்ல விரும்புவதில்லை என சிந்திக்க வேண்டும்‌ பள்ளிகள்‌ குழந்தைகளை என்ன செய்கின்றன என யோசிக்க வேண்டும்‌. குழந்தைகள்‌ மகிழ்ச்சியாக வந்து போக கூடிய இடமாக ஆரம்பக்‌ கல்வியை மாற்ற வேண்டூும்‌.அதனை செயற்படுத்தி காட்டியவரே மரியா மாண்ட்டிசோரி ஆவார்‌ நாம்‌ மாண்ட்டிசோரி அல்லது நெர்ஸரி என்று அழைக்கும்‌ இந்த ஆரம்பக்‌ கல்வியை பாலர்‌ கல்வி என்று விளக்கலாம்‌. இதில்‌ கல்வி முதன்மையாக இல்லை என்றாலும்‌ கூட ஏதோ ஒன்றை தாம்‌ விரும்பிய முறையில்‌ கற்றுக்கொள்கிறோம்‌ என்பதால்‌ பாலர்‌ கல்வி பிள்ளைகளை உருவாக்குவதில்‌ பிரதான இடம்‌ வகிக்கின்றது.

மரியா மாண்ட்டிசோரி இவர்தான்‌ குழந்தைகளுக்கான மாண்ட்டிசோரி கல்வி முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்‌. இலங்கைக்கு வந்து அதனை நிறுவியரும்‌ அவரே என்றால்‌ அது மிகையல்ல கல்வி சார்ந்த இத்தாலியில்‌ ஜம்பது ஏழைப்பிள்ளைகளுக்கு கண்காணிப்பாளராக ஆரம்பத்தில்‌ இருந்தார்‌ மரியா பிள்ளைகளை மிரட்டுவதோ, அடிப்பதோ பிடிக்காத அன்பான நபர்‌ அவர்‌. அங்கே இருந்த பிள்ளைகளின்‌ பொழுதை எப்படி உற்சாகம்‌ நிறைந்ததாக ஆக்குவது என்று அவர்‌ யோசித்தார்‌. புத்தகங்களுக்கு பதில்‌ பொம்மைகளை அவர்களின்‌ கையில்‌ கொடுத்தார்‌. எழுத்துக்களை சொல்லித்தருவதற்கு முன்னர்‌ அவற்றை உணர்கிற வகையில்‌ பொருட்களை காட்டினார்‌. வீட்டில்‌ குழந்தைகள்‌ வேலையே செய்ய விடக்கூடாது என்று இருந்த பொழுது எளிய செயல்களை செய்ய வைத்து பிள்ளைகளை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டார்‌.மாணவர்கள்‌ ஆசிரியர்களை கவனிக்க வைக்க நாம்‌ முயலக்கூடாது, ஆசிரியர்‌ மாணவரை கவனித்து கற்றுக்கொள்ள வேண்டும்‌ என்று சொன்னவர்‌ அப்படியே பிள்ளைகளை நடத்தினார்‌. வண்ண அட்டைகள்‌, ஒலி எழுப்பும்‌ கருவிகள்‌, ஓவியங்கள்‌ என்று குழந்தைகளின்‌ கற்றலை வண்ணமயமானதாக வகுப்புக்களை உருவாக்கினார்‌.

இன்று உலகம்‌ முழுக்க 20 ஆயிரம்‌ பள்ளிகள்‌, 110 நாடுகள்‌ என்று விரிந்திருக்கும்‌ அவரின்‌ கனவு முழுக்க முழுக்க குழந்தைகளுக்கானது. இந்த உலகப்‌ புகழ்பெற்ற கல்வி முறை இலங்கைக்கு அறிமுகமாகி 74 ஆண்டுகள்‌ ஆகின்றன. மரியா மொண்டிசோரி குழந்தைகளுக்கான இந்தக்‌ கல்விமுறையை இலங்கைக்கு வந்து அறிமுகப்படுத்திக்‌ கொடுத்தார்‌ என்பதுதான்‌ இங்கே விசேடமாககுறித்துக்‌ காட்டவேண்டிய விடயம்‌. மாண்ட்டிசோரி கல்வி என்பது ஒருவகை பயிற்றுவிப்பு முறையாகும்‌. இத்தாலியைச்‌ சேர்ந்த மருத்துவரும்‌ கல்வியாளருமான மரியா மொண்டசோரியால்‌ உருவாக்கப்பட்ட கல்வி முறையை உலகம்‌ முழுவதுமாக சுமார்‌ 20,0000 பள்ளிக்கூடங்கள்‌ பின்பற்றுகின்றன. மொண்டிசோரி கல்வி என்பது சுதந்திரத்தை வலியுறுத்தி, அச்சுதந்திரத்தை வரையறைக்குள்‌ கொண்டுூவந்து, குழந்தைகளின்‌ இயல்பான உளவியல்‌, உடல்‌ மற்றும்‌ சமூக வளர்ச்சியை மதிப்பதைக்‌ குறிப்பதாக உள்ளது.

கல்வியின்‌ வழியாக குழந்தையின்‌ உள்ளார்ந்த பண்புகள்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக தாமாகவே வெளிப்பட வேண்டும்‌ என்று மாண்டிசோரி வலியுறுத்தினார்‌. இங்கு குழந்தையின்‌ தனித்தன்மை மதிக்கப்பட வேண்டும்‌. இதற்கு சுதந்திரம்‌ மிகவும்‌ அவசியம்‌ என்று கூறினார்‌. புலன்களுக்கான பயிற்சி மிக மிக அவசியம்‌ என்றும்‌ இவைகளே அறிவின்‌ தொடக்க வாயில்கள்‌ என்றும்‌ எடுத்துரைத்தார்‌. மாண்டிசோரி “சுதந்திரம்‌' என்ற வார்த்தையை அதிக பயன்படுத்தக்‌ காரணம்‌,

அக்காலத்தில்‌ கட்டுப்பாடுகள்‌ மூலம்‌ மட்டுமே ஒழுக்கத்தை மாணவர்களிடம்‌ கொண்டுவர முடியும்‌ என்ற எண்ணம்‌ இருந்ததே ஆகும்‌. அக்காலக்‌ கல்வி முறையில்‌ தவறு செய்யும்‌ மாணவர்கள்‌ கடூமையாகத்‌ தண்டிக்கப்பட்டார்கள்‌. பயம்‌ மூலம்‌ ஒழுக்கம்‌ வரும்‌ என்பது அப்போதைய சிந்தனையாக இருந்தது.

பிள்ளைகள்‌ என்றுமே சுதந்திரமாக இருக்கவே விரும்புவார்கள்‌ மற்றும்‌ அவர்களை ஈர்க்கும்‌ வகையில்‌ அமையும்‌ காட்சிகளை மீண்டும்‌ செய்து பார்க்க ஆசைப்படுவார்கள்‌ அதன்‌ விளைவாகவே அவர்கள்‌ கார்டூட்களுக்கு அடிமையாக்கப்படுூவதுடன்‌ அதில்‌ வரும்‌ கதாப்பாத்திங்களை போலவே பேசிப்‌ பழக எத்தணிக்கின்றனர்‌. மாறாக அவை செயற்கை தன்மை வாய்ந்தவை என்பதை பெற்றோர்கள்‌ உணருவதில்லை சிரமங்களை கருத்திற்‌ கொண்டு தொலைக்காட்சி பார்க்கும்‌ பழக்கத்தை பிள்ளைகள்‌ மனதில்‌ பதிய வைத்துவிடுகின்றனர்‌.

இத்தகைய செயற்பாடுகளை தடுக்கும்‌ முகமாகவே 1906 ஆம்‌ ஆண்டில்‌, மரியா மாண்ட்டிசோரி ஏ.எம்‌.ஐ அல்லது அசோசியேஷன்‌ என்ற சர்வதேச மாண்ட்டிசோரி குழந்தை கல்வி முறையை அறிமுகப்படுத்தினார்‌. இந்தக்‌ கல்விமுறையை இலங்கையில்‌ பரப்பும்‌ பணி 1944 ஆம்‌ ஆண்டில்‌ கத்தோலிக்க திருச்சபையின்‌ திருக்குடும்ப கன்னிய சபையினருக்கு முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 73 ஆண்டுகளாக, இவர்கள்‌ இலங்கையில்‌ பாலர்‌ குழந்தைகளின்‌ கல்வியை வடிவமைப்பதில்‌ முன்னிலை வகித்து வருகின்றனர்‌. மேலும்‌ இந்த முறையைப்‌ பின்பற்றி ஆயிரக்கணக்கான ஆசிரியர்களையும்‌ உருவாக்கியுள்ளனர்‌.

கொட்டாஞ்சேனை Good Shepherd  கல்லூரியில்‌ மரியா மாண்ட்டிசோரி நடத்திய பாலர்‌ பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிப்‌ பட்டறையில்‌ கலந்துகொண்டஜோய்ஸ்‌ குணசேகர 1935 ஆம்‌ ஆண்டில்‌ மரியா மாண்ட்டிசோரி நெதர்லாந்தின்‌ அம்ஸ்டர்டாமில்‌ அசோசியேஷன்‌ மாண்ட்டிசோரி சர்வதேச தலைமையகத்தை நிறுவினார்‌. இந்தத்‌ தலைமையகத்துடன்‌ இணைந்து இலங்கையில்‌ இயங்கும்‌ ஒரே பாடசாலைகளாக  Good Shepherd Maria Montessori சிவார்க விளங்குகின்றது. 1944 ஆம்‌ ஆண்டு இலங்கையில்‌ பாலர்‌ கல்வியில்‌ மிக முக்கிய ஆண்டாகக்‌ கருதப்படுகின்றது. இலங்கை ஆசிரியர்‌ சங்கத்தின்‌ அழைப்பின்‌ பேரில்‌, திருமதி மரியா மாண்ட்டிசோரி தனது மகன்‌ மரியோவுடன்‌ இலங்கைக்கு வந்து இங்கு முதல்‌ முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியை நடத்தினார்‌. இந்தியாவில்‌ ஆசிரியர்‌ பயிற்சித்‌திட்டத்தை முடித்த பின்னர்‌ மரியா மாண்ட்டிசோரி அங்கிருந்து இலங்கைக்கு வந்திருந்தார்‌. இலங்கையின்‌ ஜோய்ஸ்‌ குணசேகர மற்றும்‌ லீனா விக்ரமரத்ன ஆகியோர்‌ இந்தியாவில்‌ பயிற்சியில்‌ கலந்து கொண்டனர்‌. இது பின்னர்‌ இலங்கையில்‌ முதன்மையான மொண்டிசோரி கல்வியாக மாறியது.

கொட்டாஞ்சேனை புழழன ஞாநாநசன கல்லூரியில்‌ மரியா மாண்ட்டிசோரி நடத்திய பாலர்‌ பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிப்‌ பட்டறையில்‌ ஜோய்ஸ்‌ குணசேகர மற்றும்‌ லீனா விக்ரமரத்ன ஆகியோர்‌ கலந்துகொண்டனர்‌. அதன்பிறகு இந்த இருவரும்‌ தங்கள்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ பாலர்‌ பாடசாலைகளை இலங்கையில்‌ மேம்படூத்துவதற்காகவே செலவிட்டனர்‌.

நான்‌ புதிய கல்வி முறையைக்‌ கண்டூபிடிக்கவில்லை. சில சிறிய குழந்தைகளுக்கு வாழ்வதற்கு ஒரு வாய்ப்பைக்‌ கொடுத்தேன்‌. கற்பது என்பது இருவழிப்பாதை குழந்தைகள்‌ காட்டிய வழியை நான்‌ தொகுத்தேன்‌ என்று தனது மாண்டிசோரிக்‌ கல்வி முறை பற்றிப்‌ பலமுறை கூறியவர்‌ தான்‌ மரியா மாண்டிசோரி மிகக்‌ குறுகிய காலத்தில்‌ உலகமெங்கும்‌ பயணித்து, குழந்தைகள்‌ கல்வி போதனையில்‌ மாபெரும்‌ மாற்றத்தை ஏற்படூத்தியர்‌ இந்த அம்மையார்‌ உலக அமைதிக்கான நோபல்‌ பரிசு பெறுவதற்காக மூன்று முறை முதல்‌ நபராகப்‌ பரிந்துரைக்கப்பட்டவர்‌ இவர்‌ வாழ்ந்த காலத்திலேயே இவரது மாண்டிசோரி கல்வியகங்கள்‌ மூவாயிரத்துக்கும்‌ மேலாக உலகமெங்கும்‌ தோன்றியிருந்தன. இந்த அபார எண்ணிக்கையைக்‌ கொண்டே இக்கல்வியாளரின்‌ தாக்கத்தை நாம்‌ புரிந்து கொள்ள முடியும்‌.

ஆசிரியர்கள்‌ குழந்தைகளுக்குச்‌ சொல்லிக்‌ கொடுப்பதை விட ஒவ்வொரு குழந்தையும்‌ தானாகவே கல்வி கற்க வேண்டும்‌ என்பது மாண்டிசோரிக்‌ கல்வியின்‌ கோட்பாடாக அமைந்திருந்தது. “குழந்தை தானாகக்‌ கற்கும்‌ கல்வியே சிறந்த கல்வி' என்று கூறினார்‌ மாண்டிசோரி.

மாண்டிசோரி தனது கற்பித்தல்‌ முறையில்‌ குழந்தைகளை சுதந்திரமாக இருக்க, செயல்பட பயிற்சி தந்தார்‌. அவர்களது தொடு உணர்ச்சி நல்ல வளர்ச்சியைத்‌ தருகின்றது என்றும்‌ ,தனைப்‌ புறக்கணிக்கும்போது உணர்ச்சி சார்ந்த பயிற்சியே இல்லாமல்‌ போய்விடும்‌ என்பதையும்‌ எடுத்துரைத்தார்‌. மாண்டிசோரி போதனா முறையில்‌ பரிசுகள்‌, தண்டனைகள்‌ இல்லை.மாறாக, குழந்தைகளின்‌ மனவளர்ச்சியும்‌, அதனை அவர்கள்‌ உணர்வதுமே மிகப்‌ பெரிய பரிசு என்று கருதப்பட்டது. மாண்டிசோரிக்‌ கல்வி முறையில்‌ அறிமுகம்‌ செய்த செயல்முறைக்‌ கற்றல்‌ கருவிகள்‌ எல்லாவற்றையும்‌ நன்கு பரிசோதித்த பின்பே மாண்டிசோரி அவற்றைப்‌ பயன்படுத்தினார்‌.

 குழந்தைகளும்‌ அந்தக்‌ கருவிகளை பலமுறை பயன்படுத்திக்‌ கற்றுக்‌ கொண்டனர்‌. அவர்கள்‌ தவறு செய்யும்‌ போது, அந்தக்‌ கருவிகளே அதைச்‌ சுட்டிக்காட்டி விடும்‌. எனவே, மீண்டும்‌ முயற்சித்து சரிவரச்‌ செய்தனர்‌. இந்த அமைதியான, ஆக்கப்பூர்வமான அணுகுமுறை குழந்தைகளை நன்கு ஈர்த்தது இந்தக்‌ கருவிகள்‌ பிறர்‌ உதவியின்றிக்‌ குழந்தைகளாலேயே பயன்படூத்தப்படும்படி அமைந்திருந்தது இதன்‌ சிறப்பு இக்கருவிகள்‌ எழுதுவது, படிப்பது, கணக்குகள்‌ போடூவது ஆகியவற்றைக்‌ குழந்தைகள்‌ ஆர்வமாகக்‌ கற்றுக்‌ கொள்ள உதவியது.

மாண்டிசோரிக்‌ கல்வியில்‌ வழங்கப்பட்ட கருவிகள்‌ குழந்தைகளின்‌ மனக்கதவுகளைத்‌ திறக்கும்‌ திறவுகோல்களாக இருந்தன. இக்கல்விமுறையில்‌ உண்மையும்‌, மனித இயற்கையும்‌ கற்றுத்‌ தரப்பட்டது.1912-ஆம்‌ ஆண்டு தனது அனுபவங்களைச்‌ சேகரித்து, எழுதி “மாண்டிசோரி முறை” என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டார்‌ மாண்டிசோரி. மேலும்‌ குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல்‌ 6 முதல்‌ 10- வயது உள்ள மாணவர்களுக்கும்‌ கல்வி முறையைத்‌ தந்தார்‌. இது மாண்டிசோரி உயர்கல்வி முறை  என்றழைக்கப்பட்டது. “மாண்டிசோரி உயர்‌ கல்வி முறை' என்ற புத்தகமாகவும்‌ எழுதி வெளியிட்டார்‌ மரியா. இந்த நூலில்‌ உள்ள பல குறிப்பிட்ட முறைகள்‌ இன்று பல்வேறு பாடத்திட்டங்களிலும்‌, கல்வி நிறுவனங்களிலும்‌ பயன்படுத்தப்படுகின்றது.

கல்வியின்‌ நோக்கம்‌ என்பது மாணவர்களின்‌ உள்ளார்ந்த திறமைகளை மலரச்‌ செய்வதே என்பதை மாண்டிசோரி உலகறியச்‌ செய்தார்‌.பிறப்பு முதல்‌ 6-வயது வரை பஞ்சானது தண்ணீரை உறிஞ்சுவதுபோல வெளிப்புறமிருந்து குழந்தை கற்றுக்‌ கொள்கிறது. இது முதல்‌ பருவம்‌. 7 முதல்‌ 16 வயது வரை எழுதுதல்‌, வாசித்தல்‌, கணக்குப்‌ போடுதல்‌ என்ற அடுத்த நிலைத்‌ திறமைகளில்‌ வளர்கின்றது என்பதே இரண்டாம்‌ பருவம்‌ என்று கூறியதோடு, இந்த இரண்டூ பருவங்களும்‌ ஒவ்வொரு குழந்தையின்‌ வாழ்விலும்‌ மிக மிக முக்கியமானது என்பதையும்‌ தன்‌ சொற்பொழிவுகள்‌, கட்டுரைகள்‌ மூலம்‌ பலமுறை வலியுறுத்தினார்‌ மாண்டிசோரி.

ஐம்புலன்களுக்கும்‌ சரியான பயிற்சியை குழந்தைகளின்‌ மூன்று முதல்‌ ஏழு வயதுக்குள்‌ வழங்க வேண்டும்‌ என்பது மாண்டிசோரிக்‌ கல்வியின்‌ முக்கியக்‌ கருத்தாகும்‌. புலன்களுக்குப்‌ பயிற்சி தர எடை, வண்ணம்‌, ஒலி, தொடூ உணர்வு, வெப்ப உணர்வு ஆகியவற்றை உணர்த்தும்‌ கருவிகளை மாண்டிசோரி உருவாக்கினார்‌. புலப்பயிற்சியின்போது இது ஊதா, வெள்ளை என்று நிறம்‌ உணரப்படுகிறது. இது உயரம்‌, குட்டை என்று அளவுகள்‌ உணர்த்தப்படுகிறது. ஒரு ரோஜாவின்‌ படத்தைக்‌ காட்டுவதை விட, ரோஜாவைக்‌ காட்டும்போது, அதனை நுகரும்போது, தொட்டு உணரும்‌ போது, நேரடியாகப்‌ பார்க்கின்ற போது பெறும்‌ கற்றல்‌ பெரிது என்பதை உணர்த்திக்காட்டினார்‌ மாண்டிசோரி.

புலன்களுக்குச்‌ சரியான பயிற்சியை அளித்தால்‌ குழந்தைகள்‌ பிற்காலத்தில்‌ ஐம்பது அல்லதுஅறுபது ஆண்டூகளில்‌ கற்கக்‌ கூடிய திறன்களை குழந்தைப்‌ பருவத்திலேயே பெற்று விடுகின்றார்கள்‌. இதன்‌ மூலம்‌ தவறு செய்வதைக்‌ குறைத்துக்‌ கொள்கின்றார்கள்‌. அறிவியல்‌ வளர்ச்சியும்‌ அவர்களுக்கு அதிகரிக்கின்றது. எனவே, ஒவ்வொரு புலனையும்‌ செயல்படுத்திக்‌ கற்க ஏராளமான வழிமுறைகளையும்‌, உபகரணங்களையும்‌, கருவிகளையும்‌ உருவாக்கித்‌ தந்தார்‌ மாண்டிசோரி. ஆனால்‌ தற்கால நடைமுறைகளின்‌ படி கோட்பாட்டு வடிவமாக அவரது கருத்துக்கள்‌ காணப்படுகின்றதே தவிர மாறாக செயற்பாட்டு ரீதியில்‌ இன்னும்‌ தாக்கத்தை செலுத்தவில்லை என்பதையே அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள்‌ பிள்ளைகளின்‌ நலனில்‌ அக்கறை செலுத்துவதை காட்டிலும்‌ வருமான நோக்கில்‌ செயற்கின்றவர்களாக காணப்படூகின்றமையால்‌ முன்பள்ளி கல்வி பலவீனமாக காணப்படுகின்றது எனலாம்‌.

பிள்ளைகளின்‌ உடல்‌ உள விருத்தி என்பது பெற்றோர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ கூட்டு முயற்சியால்‌ கட்டியெழுப்பபட வேண்டிய ஒன்றாக காணப்படுகின்றமையால்‌ வளர்ந்து வரும்‌ உலகில்‌ பிள்ளைகள்‌ எதிர்நோக்க வேண்டியப பல்வேறு விதமான சவால்களுக்கு அவர்கள்‌ முகங்கொடுக்க கூடிய வகையில்‌ அவர்களின்‌ ஆரம்பக்‌ கல்வி கட்டியமைக்கப்பட வேண்டுமென்றால்‌ அது மிகையல்ல.



போ.மெரினா சுதர்ஷினி
நான்காம்‌ வருட கல்வியில்‌ சிறப்புக்கற்கை மாணவி
கல்வி, பிள்ளை நலத்துறை
கிழக்கு பல்கலைக்கழகம்‌, இலங்கை