அம்பாறையில் ஐஸ் போதைப் பொருளுடன், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர் கைது !


ஐஸ் போதைப் பொருளுடன், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர ஒருவரை, அம்பாறை கல்முனை விசேட அதிரடிப்படையினர் நேற்றுக் கைது செய்துள்ளனர்.

புலானாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் விநியோகம் செய்து வந்தவர் என சந்தேக நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்யும் போது, அவரது உடமையில் இருந்து 23 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.