மீன்பிடி படகு கப்பலுடன் மோதி விபத்து- மூவரை காணவில்லை !


மீன்பிடி படகு ஒன்று கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மீனவர்களைக் காணவில்லை.

இலங்கை கடற்பரப்பில் சுமார் 270 கிலோமீற்றர் தொலைவில் நேற்று (03) அதிகாலை 7 மீனவர்களுடன் பயணித்த மீன்பிடி படகு ஒன்றே இவ்வாறு கப்பல் ஒன்றுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் 28, 43 மற்றும் 52 வயதுடைய அஹுகல்ல, கொஸ்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட மீனவர்களை கரைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.