மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை : பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் !


ஹம்பாந்தோட்டை, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் இன்று (30) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அதனால் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.