மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நான்கு கொள்ளையர்களுக்கும் மசாஜ் நிலையத்தில் இருந்த ஏனைய நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மூவர் காயமடைந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் கொள்ளையர்கள் இருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த கொள்ளையர்கள் இருவரும் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொள்ளையர்களால் தாக்கப்பட்டுக் காயமடைந்த நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஏனைய கொள்ளையர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் களுஅக்கல மற்றும் மல்வானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.