சிறுவர் பெண்கள் துஸ்பிரயோக தடுப்பு பொலிஸ் பிரிவின் போலி இலச்சினையை பயன்படுத்தி மோசடி; பொலிஸார் எச்சரிக்கை !


சமூக ஊடகங்கள் மற்றும் சிறுவர் பெண்கள் துஸ்பிரயோக தடுப்பு பொலிஸ்பிரிவின் போலி இலச்சினை ஆகியவற்றை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை பெறும் மோசடி குறித்து இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது

பொலிஸார் துஸ்பிரயோகத்திற்குள்ளானவர்கள் முறைப்பாடு செய்வதற்காக விசேட தொலைபேசி இலக்கத்தினை அறிமுகம் செய்துள்ளனர்.

சிறுவர் பெண்கள் துஸ்பிரயோக தடுப்பு பொலிஸாரே இதனை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மிக கடுமையான நம்பகதன்மையை பேணியே விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.பணியில் உள்ள பொலிஸார் இந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மாத்திரமே தொடர்புகொள்கின்றனர்.

எனினும் என்ற பெயரிலான வட்ஸ்அப் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் என்ற பெயரிலான கணக்குகளையும் போலி இலச்சினைகளையும் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விபரங்கள் சேகரிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

மோசடிசெய்பவர்கள் போலி இலைச்சினைகளை பயன்படுத்தி தனிப்பட்ட விபரங்கள் படங்களை பெற்று அவற்றை பயன்படுத்திவருவதை விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிறுவர் பெண்கள் துஸ்பிரயோக தடுப்பு பிரிவு அறிமுகப்படுத்தியுள்ள தொலைபேசி இலக்கம் மூலமே விபரங்களை பெறுகின்றோம் சமூக ஊடகங்கள் ஊடாக விபரங்களை பெறவில்லை.

பொதுமக்கள் போலியான சமூக ஊடக கணக்குகளை நம்பி தங்களின் தனிப்பட்ட விபரங்களை பகிரக்கூடாது.