கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவால் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஜெ.எஸ்.அருள்ராஜ், முன்னாள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், பிரதேச செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் என பல உயர் பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











.jpeg)
%20(1).jpg)
.jpeg)