முன்னாள் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் பாஸ்கரன் காலமானார்

(சித்தா)

தற்போது மட்டக்களப்பு நகரில் வசித்தவரும் கல்முனை ஸாகிரா கல்லூரியின் முன்னாள் பிரபல இரசாயனவியல் ஆசிரியரும், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆங்கில பாட பகுதிநேர விரிவுரையாளருமாகிய எம்.பாஸ்கரன் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார்.

இவர் தனக்கென தனித்துவமான ஒரு பாணியைப் பின்பற்றிய  கட்டுப்பாடும் இறை பக்தியும் மிகுந்த ஒருவராகவும், சிறந்த ஆங்கில தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.