ஏப்ரல் மாதத்தின் முதல் 6 நாட்களில் 38,615 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை


2025 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தின் முதல் 6 நாட்களில் 38,615 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 760,891 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 124,863 ஆகும்.

மேலும், ரஷ்யாவிலிருந்து 97,753 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 75,143 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 52,770 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 40,669 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 45,161 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 30,136 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும், மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.