சித்தாண்டியைப் பிறப்பிடமாகவும் வாழைச்சேனை மற்றும் தற்காலம் பெய்லி குரோஸ் வீதி உப்போடையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிள்ளையான் நல்லரெத்தினம் அவர்கள் இன்று (19.04.2025) காலமானார்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை 1991/1992 அணி பயிற்சி ஆசிரியராகவும் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின் மிகச் சிறந்த ஆசிரியராகவும் வரலாறு பாடத்திற்கான சேவைக்கால ஆலோசகராகவும், சிறந்த பணியாற்றிய இவருடைய இழப்பு கல்விச் சமூகத்திற்குப் பேரிழப்பாகும். கடின உழைப்பு, சமூகப்பற்று, சிறந்த மனித நேயம், நேர்மை, கலகலப்பான சுபாவம், நகைச்சுவை உணர்வு மிக்க ஒரு கல்வியியலாளனை எமது கல்விச் சமூகம் இழந்துள்ளது.