இன்றைய நாணய மாற்று விகிதம் !


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (09) அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 294.88 ரூபாவாகவும், 303.24 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்வனவு மற்றும் விற்பனையானது 295.07 ரூபாவாகவும், 303.56 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு நாணயங்களின் பெறுமதிக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.