குருமண்வெளிக் கிராமத்தின் வராலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான், ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

(சித்தா)

சிவபூமியாய் விளங்குகின்ற ஈழத் திருநாட்டின் கிழக்குமாகாணத்தில் வற்றாத பொய்கையும் வள நாடும் கண்ட தேன் நாடாம் புகழ் மட்டுநகரின், தென் திசையில் முத்தமிழும் முனி குருமாரும் குருத்து வளமிக்க மண்ணும், கமலமும், ஆம்பலும் மணம் வீச மட்டு வாவி தேன் இசையால் தாலாட்ட இயற்கை எழில் கொஞ்சும் சோழவள அழகு சீர்பாதகுல மக்கள் சைவமும் தமிழையும் காத்து வரும் குருமண்வெளிப் பதியில் நாகர் காலத்தில் ஆதிசிவன் வழிபாட்டோடு தொடர்புபட்ட நாகதம்பிரானோடு ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமாதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு பெருமானுக்கு நிகழும் சர்வமங்களகரமான விசுவாசசு வருடம் உத்தராயண ஆனித் திங்கள் 18 ஆம் நாள் 02.07.2025 புதன் கிழமை ஸப்தமி திதியும் உத்தர நட்சத்திரமும் அமிர்த சித்த யோகமும் மிதுன லக்கினமும் கூடிய காலை 5.54 மணி முதல் 6.56 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் ஸ்ரீ நாகதம்பிரான் ஸ்ரீ மஹா விஷ்ணுப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாவிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த வகையில் எதிர்வரும் 27.06.2025 வெள்ளிக் கிழமை கிரியாரம்பமும், 01.07.2025 செவ்வாய்க்கிழமை எண்ணைக்காப்பும், 02.07.2025 மஹா கும்பாவிஷேகமும் இடம்பெறவுள்ளது. இது தவிர 27.06.2025 தொடக்கம் 02.07.2025 வரையான காலப்பகுதியில் விஷேட பூசைகளும், யாகங்களும் நடைபெறுவதுடன், கும்பாவிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக பூசையும்   1008 சங்காபிஷேகமும் நடைபெறவுள்ளது.