காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 81 வயதான பௌத்த துறவி கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கிய நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் குறித்த சுற்றுலாப் பயணி முறையிட்டதை அடுத்து பௌத்த துறவி கைது செய்யப்பட்டார்.