
கண்டி நகரில் 1500ற்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க இது பற்றி மேலும் தெரிவித்ததாவது,
கண்டி நகரில் சுமார் 3000 ற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன. இருப்பினும் அவற்றில் 1861 வண்டிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே நேரம் வருமானவரி அனுமதிப்பத்திரும் உள்ள மாநகர சபையில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு மட்டுமே சகரில் தரிப்பிடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சுமார் 300 முச்சக்கர வண்டிகள் மாத்திரமே இச்சலுகையைப் பெற்றுள்ளன.
இது ஒரு பாரிய சவாலாகும். எனவே முச்சக்கர வண்டி பாவணையை ஊக்குவிக்க முடியாதுள்ள.
முச்சக்கர வண்டிகள் மூலம் 5 மில்லியன் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்து வரவு செலவுத்திட்டத்தில் நாம் எதிர் பார்த்த போதும் அதனை அடைய முடியாது போகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.