ஜப்பானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி மக்களிடம் பண மோசடி செய்த பெண் ஒருவர் குறித்த தகவல் கல்கிஸ்ஸ பகுதியில் இருந்து வெளியாகியுள்ளது.
இரண்டு வருட Work Visa வழங்குவதாகக் கூறி, இந்தப் பெண் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பணம் மோசடி செய்ததாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதன்படி, கம்பளை பகுதியில் வசிக்கும் ஒருவர் 2023 நவம்பர் 14ஆம் திகதி குறித்த பெண்ணிடம் 5 இலட்சம் ரூபாவை முதற்கட்டமாக வழங்கியுள்ளார்.
இருப்பினும், குறித்த பெண் இன்னும் பணத்தைத் திருப்பித் தரவில்லை அல்லது ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், அந்தப் பெண்ணுக்கு எதிராக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த பெண் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.
இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில் இந்த பெண் பண மோசடி தொடர்பில் பலரை ஏமாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நடத்திய விசாரணையில், தமது பணியகத்தில் பதிவு செய்யாமல் இவ்வாறு பணம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.