காணாமல் போனவர்கள் குறித்து புதிய முறைப்பாடுகள் இல்லை !


கடந்த ஆண்டில் காணாமல் போனவர்கள் அல்லது வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எந்தவொரு புதிய முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (Office on Missing Persons - OMP) தெரிவித்துள்ளது.

அரச அதிகார்கள் அல்லது ஏனைய தரப்பினரால் எந்தவொரு முறைப்பாடுகளும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அரசாங்கத்தை விமர்சிக்கும் நபர்களைக் கைது செய்ய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2024 மனித உரிமைகள் ஆண்டு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய, 1983-2009 உள்நாட்டுப் போர் மற்றும் 1988-89 கிளர்ச்சியிலிருந்து உருவான மனித உரிமை மீறல்களை விசாரிப்பதில் சிறிய முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் மனித உரிமைகளை மீறிய அதிகாரிகளை அடையாளம் கண்டு தண்டனை வழங்குவதில் அரசாங்கம் குறைந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.