சிடாஸ் அமைப்பின் 20ஆவது வருட நிறைவையொட்டி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 'குழந்தை மொழி' எனும் துணைக் கைந்நூல் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் 2025.08.12 அன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரியதர்சினி சுஜீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் சீ.சத்தியநாயகம் உட்பட குறித்த பிரதேச செயலக உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் சிடாஸ் அமைப்பின் தலைவர் எம்.புவிராஜா, செயலாளர் சா.மோகனதாஸ், அமைப்பின் அங்கத்தவரான பே.கிருபாகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். முன்பள்ளி ஆசிரியர்களுக்கான துணைக் கைந்நூல்களை பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பின் உறுப்பினர்களும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கி வைத்தனர்.