கூரிய ஆயுதங்களால் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் பலி !



சீதுவ பொலிஸ் பிரிவின் எரிய கஹலிந்த வீதிப் பகுதியில் ஒரு குழுவினரால் கூரிய ஆயுதங்களால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சீதுவ, எரிய கஹலிந்த வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

ஒரு குழுவினரால் கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகாயமடைந்த ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளிவராத நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்ய சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.