மட்டக்களப்பிற்கு பாதுகாப்பு அமைச்சர் வருகை - பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் பாதுகாப்பு அமைச்சர் மாவட்ட அபிவிருத்திகழு கூட்டத்திற்கு வருகை தரும் நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் செம்மணி, முல்லைத்தீவு, மற்றும் சட்டவிரோத சமூக செயற்பாடுகளுக்காள நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விடுத்த அழைப்பினையடுத்து காந்தி பூங்காவில் இன்று காலை 9.00 மணிக்கு ஒன்று இணைந்தனர்

இந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாhன இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், வைத்தியர் சிறிநாத், மட்டு மாநகரசபை முதல்வர் மற்றும் பிரதேச சபை மாநகரசபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது முத்தையன்கட்டு இராணுவமுகாமில் படுகெதலை செய்யப்பட்ட கபில்ராயுக்கு நீதி வேண்டும், இராhணுவமே வெளியேறு வடக்கும் கிழககும் தமிழ்களுடைய தாயகம், இராணுவமே வெளியேறு போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இதேவேளை இன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்;சர் ஆனந்த விஜயபால தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக இடம்பெற்றுவருகின்றது.

இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர் வரும் நிலையில் நகர் மற்றும் காந்திபூங்கா அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெறும் பழைய கச்சேரி ஆகிய பிரதேசங்களில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு முக்கிய சந்திகளில் நிறுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

அதேவேளை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.