லண்டன் விம்பிள்டன் ஸ்ரீ கணபதி ஆலய இரதோற்சவம் - London , Wimbledon Shree Ghanapathy temple chariot


லண்டன் விம்பிள்டன் ஸ்ரீ கணபதி ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (03.08.2025) காலை  இடம்பெற்றது . 

பக்த அடியார்கள் பாற்குடம் , கற்பூர சட்டி ஏந்தியும் அங்கபிரதட்சணம் செய்தும்  தங்கள் வேண்டுதல்களை மேற்கொண்டிருந்தனர் .

மேலும் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு  தேர் வரும் வழியில் பல்வேறு இடங்களிலும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆலயத்தினரால் அன்னதானமும் வழங்கப்பட்டன 

லண்டனின்  பல்வேறு இடங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர் .