கிழக்கு மண்ணில் மட்டக்களப்பு பாடு மீன்களின் சமர் என்ன வர்ணிக்கப்படும் இரு தேசிய மகளிர் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2025!


(ஆர்.நிரோசன்)

12வது தடவையாக இடம்பெறும் மாபெரும் 20/20 கிரிக்கெட் சுற்றுபோட்டி ( 20) சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் அருட்தந்தை கிளமண்ட் அண்ணதாஸ் அவர்களின் ஆசீர்வாத செய்திகளுடன் மட்டக்களப்பு வெப்பர் மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை மற்றும் வின்சென்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவிகளுக்கு இடையிலான 20/20 ஓவர்கள் கொண்ட இச் சுற்றுப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற

வின்சன்ட் அணியினர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து முதலில் துடுப்பெடுத்தாடிய வின்சென்ட் மகளிர் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிசிலியா பாடசாலை அணியினர் 18-வது ஓவர் முடிவில் 09 விக்கட்டுகளை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று 2025ஆம் ஆண்டிற்கான வெற்றி கிண்ணத்தை சுபிகரித்தனர்.

அதில் அமோரிட்டா அகஸ்டின் 05 சிக்ஸர்கள் அடங்களாக 28 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்று போட்டியின் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை ஆக தெரிவு செய்யப்பட்டார்.

இப் போட்டியை காண பாடசாலைகளின் பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .


கிழக்கு மண்ணில் மட்டக்களப்பு பாடு மீன்களின் சமர் என்ன வர்ணிக்கப்படும் இரு தேசிய மகளிர் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2025!

Posted by Battinews on Sunday, September 21, 2025