கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவி திலகராஜா தினன்யா Robotic and Invention Competition இல் தேசியமட்டச் சாதனை

(சித்தா)
கல்வி, உயர்கல்வி, மற்றும் தொழில்கல்வி அமைச்சினால் அபே கம, பத்தரமுல்ல எனும் இடத்தில் 25.09.2025 ஆம் திகதி நடைபெற்ற தேசிய மட்ட பாடசாலை மாணவர்களுக்கான  Robotic and Invention Competition -2025  இல்  தரம் - 7  ஐச் சேர்ந்த செல்வி. திலகராஜா தினன்யா அவர்கள்  Invention-Entertainment  பிரிவில் Female Award இனை  பெற்றுச் தேசிய மட்டச் சாதனை புரிந்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான  Robotic and Invention Competition -2025 ஆனது கடந்த July மாதம் வலய மட்டத்தில் இடம்பெற்றது.

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி  பாடசாலையை சேர்ந்த 10 மாணவர்களின் படைப்புகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும்  நான்கு மாணவர்கள் மாகாணமட்ட போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

தொடர்ந்து இடம் பெற்ற மாகாணமட்ட போட்டியில் 3 மாணவர்கள்  Merit Award  பெற்றிருந்ததோடு, தரம் - 7  ஐச் சேர்ந்த செல்வி. திலகராஜா தினன்யா அவர்கள்  Invention-Entertainment  பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.