மட்டக்களப்பு புளுமிங் பட்ஸ் முன்பள்ளியின் பிள்ளைகள் - பெற்றோர் விளையாட்டு விழா 2025

(சித்தா)

மட்டக்களப்பு புளுமிங் பட்ஸ் முன்பள்ளியின் பிள்ளைகள் - பெற்றோர் விளையாட்டு விழா முன்பள்ளியின் அதிபர்  காமலீற்றா தேவநம்பி அவர்களின் தலைமையில் 2025.10.04 சனிக்கிழமையன்று பிற்பகல் 4.00 மணியளவில்  சீலாமுனை ஜங் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் அதிதிகளாக மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருச்செல்வம் மேகராஜா, முதன்மை உளவளத்துணையாளரும் முதன்மை வளவாளருமான முத்துராஜா புவிராஜா, ஓய்வுநிலை அதிபரான  விஜயலெட்சுமி இராமச்சந்திரா, இவர்களுடன் மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவிப் பணிப்பாளர் எந்திரி கமலநாதன் தேவநம்பி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள். 

பிள்ளைகளின் ஆற்றல்கள் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறுபட்ட மகிழ்ச்சிகரமான விளையாட்டுகளும் இடம்பெற்றன. இங்கு இடம்பெற்ற அனைத்து விளையாட்டுக்களிலும் பிள்ளைகள் தமது பெற்றோர்களுடன் இணைந்தே கலந்துகொண்டமையானது சிறப்பம்சமாகும். இவ் விளையாட்டுகள் அனைத்தும் வெற்றி - வெற்றி விளையாட்டுக்களாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் அதிதிகளினால் பரிசுகள் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மிகச் சிறப்பான முறையில் விழாவை பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன்  ஒழுங்கமைத்து செயற்படுத்திய முன்பள்ளியின் அதிபர், ஆசிரியர்களுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்