களுத்துறை, வாதுவை, மொல்லிகொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் உள்ள வாசஸ்தலத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டு சம்பவம் சனிக்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வாதுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விகாரையின் வாசஸ்தலத்தில் இருந்து 820,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.