கட்டுநாயக்கவில் வெளிநாட்டு சிகரெட்டுகடுகளுடன் ஒருவர் கைது !


4.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைதான நபர் புத்தளம், கற்பிட்டியைச் சேர்ந்த 44 வயதுடைய கடற்றொழிலாளர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறிதத் நபர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ருடு-226 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை, இன்றையதினம் காலை 05.25 அளவில் வந்தடைந்துள்ளார்.

அவரிடம் 30 ஆயிரம் 150 "பிளாட்டினம்" சிகரெட்டுகள் அடங்கிய சிகரெட்டுகள் அடங்கிய 02 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபரும், அவர் சட்டவிரோதமாக கொண்டுவந்த சிகரெட்டுகளும் எதிர்வரும் 08 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.