மடுல்சீமை சிறிய உலக முடிவை பார்வையிட சென்றவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி !


மடுல்சீமை சிறிய உலக முடிவை பார்வையிட சென்ற 9 பேர் கொண்ட குழு குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்காகியவர்கள் லுணுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மடுல்சீமை சிறிய உலக முடிவை பார்வையிடுவதற்காக பியகம மல்வானையிலிருந்து வந்த 9 பேர் கொண்ட குழுவே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மடுல்சீமை சிறிய உலக முடிவுக்கு அருகில் உள்ள குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.