அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 19 வீதமாக குறைவு !


அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் கடந்த ஆண்டை விடவும் இவ்வருடம் 19 வீதமளவில் குறைந்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்தார். நுகர்வோர் அடிக்கடி கொள்வனவு செய்யும் நாற்பது வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளே, இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. இவற்றில், வீட்டுத் தேவைகளுக்கு பயன்படும் பொருட்களே அதிகம். இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த அமைச்சர்;

நுகர்வோர் அடிக்கடி கொள்வனவு செய்யும் பொருட்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.இத்தகைய பொருட்களின் விலைகளைக் குறைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்தே, 55 முதல் 60 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். பொருட்களின் விலை குறைப்பை மேற்கொள்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும்.

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் நோக்குடனே அரசாங்கம் இவ்விலைகளைக் குறைத்துள்ளன.