அமெரிக்கா வழங்கும் குடியேற்ற வீசா தொடர்பில் எச்சரிக்கை !



ஆண்டுதோறும் உலகளாவிய ரீதியில் அமெரிக்கா வழங்கும் குடியேற்ற வீசா Diversity Visa-2027 நுழைவுக்கான விண்ணப்பங்கள், இவ்வருடம் இன்னும் கோரப்படவில்லை என,அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வமாக இந்த வீசாவுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னர்,சில இணையத்தளங்களில் போலியாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில்,ஏமாற வேண்டாம் என்றும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வெளியாகும் மோசடியான இணையவழி தகவல்களை, கவனத்தில் கொள்ள வேண்டாம் எனவும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த Diversity Visa-2027 குறித்து அதிகாரப்பூர்வ பதிவு மற்றும் செயல்முறைக்கான ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறையால் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.