கொழும்பு, மொரட்டுவை, எகொடஉயன பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் எகொடஉயன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எகொடஉயன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் எகொடஉயன பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் நீண்ட நாட்களாக பல்வேறு பிரதேசங்களில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றில் போதைப்பொருள் தொடர்பில் பல வழக்குகள் தொடர்ப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் எகொடஉயன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









.jpeg)


