பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களின் தந்தையார் காலமானார்.

(சித்தா)

மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் — தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார், வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் இன்று (07.11.2025) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். 

அவரது உடல் நாளை (சனிக்கிழமை 08.11.2025) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஞாயிற்றுக்கிழமை 09.11.2025 மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும்.