மட்டக்களப்பு - மாவடிவேம்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு கைப்பற்றப்பட்டு இருவர் கைது



இன்று காலை அதிரடியாக கசிப்பு இடங்கள் சுற்றிவலைப்பு செங்கலடி தவிசாளர் களத்தில் பலர் கைது

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு கைப்பற்றப்பட்டு இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை அதிரடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் 15க்கு மேற்பட்ட பொலிஸார் ஒன்றினைந்து சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களைத்தேடிய இடம்பெற்ற சுற்றிவலைப்பில் மாவடிவேம்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வீட்டு முற்றத்தில் புதைக்கப்பட்ட 40 லீற்றர் கசிப்பு வறல் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஒரு ஆண் மற்றும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டனர். குறித்த பகுதியிலுள்ள சகல இடங்களையும் பொலிசார் சோதனை செய்தனர்.

குறித்த இடத்திற்கு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேசசபை தவிசாளரும் வருகைதந்து சட்டவிரோத கசிப்பு விற்பனை செய்யும் இடங்களை அடையாளப்படுத்தி கொடுத்தமையினால் குறித்த இடங்களில் சோதனை செய்யப்ட்டு கசிப்பு விற்பனை இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தியினால் மாவடிவேம்பு பகுதியிலுள்ள மக்கள் மற்றும் குடும்பங்கள், பாடசாலை பிள்ளைகள் பாதிக்கப்படுவதாக தங்களின் கண்ணீர்மல்லக கருத்துக்களை தெரிவித்த பொருமக்கள்.

இதேவேளை நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு சந்திவெளி பொலிசார் மற்றும் தவிசாளர் சித்தாண்டி சமூகமட்ட இளைஞர்கள் ஒன்றினைந்த சுற்றிவலைப்பில் கசிப்பு மற்றும் சந்தேகேத்தின் பெயரில் எவரும் கைதுசெய்யப்படவில்லை. நேற்றிலிருந்து கசிப்பு தொடர்பான பிரச்சினை இருக்கும் இடங்களுக்கு ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரனின் வேண்டுகோளுக்கு இனங்க இரண்டு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதேவேளை சித்தாண்டி சமூக செயற்பாட்டு இளைஞர்களும் குறித்த கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தொடர்ச்சியாக பொலிசாருடன் இணைந்து ஒத்துழைப்புங்களை வழங்கிவருகின்றமை குறிப்படத்தக்கது.