நான்கரை மணிநேரம் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, எதிர்க்கட்சிகளிடம் வரவு செலவுத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) நிதியமமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாக்கவால் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு - செலவுத் திட்ட உரையின் நிறைவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிக்கையில்,
வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய அரச அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.









.jpeg)


.jpg)