ஜா-எலயில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு சீல் !


பௌர்ணமி தினத்தன்று மதுபானம் விற்றதன் காரணமாக, ஜா-எல (Ja-Ela) பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் ஜா-எல பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, சில்லறையாக மதுபானம் விற்பனை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற்ற நிலையம் ஒன்று திறக்கப்பட்டு மதுபானம் விற்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மதுபான விற்பனை நிலையத்துக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதுடன், அதற்குரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்து மதுவரித் திணைக்களம் தீவிர அவதானத்துடன் இருப்பதுடன், இவ்வாறான தகவல்கள் குறித்து திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.