பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி !


தெல்தோட்டை - கண்டி வீதியில் ஹால்வத்த பகுதியில் பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீதே இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த மேலும் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.