மாணவர்களின் ஆளுமைப் பண்புகளை விருத்தி செய்வதில் மாணவர் பாராளுமன்றம் முக்கிய பங்கு வகிக்கின்றது. மாணவர் பாராளுமன்றத்தின் மூலம் வாக்குரிமை மற்றும் அதன் முக்கியத்துவம், பாடசாலை, பிரதேச மற்றும் தேசிய மட்ட சமூக பொருளாதார விடயங்களை கலந்துரையாடி அதற்குரிய தீர்வைப் பெற பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவையுடன் மாணவர் பாராளுமன்றத்தினூடாக சமாதானம், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல், பல்லின சமூகத்தினரிடையே சகவாழ்வு, சகோதரத்துவம், ஒருமைப்பாடு, ஐக்கியம் என்பன மாணவர் பாராளுமன்றத்தினூடாக மாணவர்களிடையே வளர்க்கப்படுதல் வேண்டும் எனும் நோக்குடன் கல்வி அமைச்சின் திருத்தப்பட்ட சுற்று நிருப இலக்கம் 03/2019 படி மாணவர் பாராளுமன்றக் கட்டமைப்பு பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 07.11.2025 ஆம் திகதி கிளனி மண்டபத்தில் கலாசார பண்பாட்டு விழுமியங்களுடன் சமூக விஞ்ஞான பாடத்துறை சார்ந்த ஆசிரியர்களின்; ஒழுங்கமைப்பில் மிகவம் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் விருந்தினர்களாக கல்முனை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்களான கே.டேவிற், ஐ.எம்.மௌசூர், வி.தையிவ் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்;, மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.








.jpeg)


.jpeg)







.jpeg)


