தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் 86% வழமைக்கு - இலங்கை மின்சார சபை



சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மின்சார விநியோகத்தில் சுமார் 86% தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
 
73 இலட்சத்திற்கும் அதிகமான மின் பாவனையாளர்களில் சுமார் 39 இலட்சம் பேருக்கு சீரற்ற வானிலையின் தாக்கத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக மின்சார சபை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக மிகுந்த முயற்சியுடன் செயற்பட்டதாக பிரதிப் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, விரைவில் மின்சார விநியோக கட்டமைப்பை முழுமையாக வழமைக்கு கொண்டுவர முடியும் என நோயல் பிரியந்த குறிப்பிட்டார்.