சோதனையின் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, காலாவதியான மற்றும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய காலப்பகுதியில் மின்சார விநியோகத்தில் அடிக்கடி தடங்கல் ஏற்படுவதால், குளிரூட்டியில் வைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும்போது அதிக விழிப்புடன் இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மக்களை இதன்போது கேட்டுக் கொண்டுள்ளது.








.jpeg)




