மின் கம்பி பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு !



போவத்த -வீரபொக்குன பகுதியில் நேற்று புதன்கிழமை (03) மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் அனுருத்த குமார எனப்படும் மின்சார சபை ஊழியர் ஆவார்.

மின்சாரம் தாக்கி கடுமையான பாதிப்புக்குள்ளான அனுருத்த உடனடியாக வீரபோகுன அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்டது.

பின்னர், குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு தம்புள்ளை ரயில் நிலையத்தில் சாதாரண ஊழியர் ஒருவராக பணிக்கு சேர்ந்த 41 வயதான அனுருத்த குமார, பத்து ஆண்டுகள் அங்கு ஊழியராகப் பணியாற்றிய பின்னர் 2017 ஆம் ஆண்டு உக்குவெல மின் உற்பத்தி நிலையத்திற்கு நிரந்தர ஊழியராக மாற்றப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு முதல் அவர் ஹெட்டிபொல ரயில் நிலையத்தைச் சேர்ந்த மின்சார ஊழியராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.