ஜனாதிபதிக்கும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு


கைத்தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் வியாழக்கிழமை (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது.

அனர்த்தம் காரணமாக கைத்தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை அதிகாரிகள் இதன்போது சமர்ப்பித்ததுடன், கைத்தொழில் துறையை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில், கைத்தொழில் துறையினருக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் ரவி நிசங்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஷ்மன் அபேசிங்க, சிறு வணிக அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் மனோஜ் பிரியந்த, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. ஏ. பி. கே. நிஷாந்த உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.