மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தளவாய் பகுதியில் இலவச கல்வி வழங்கும் புதிய கல்வி மையம் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
திருமதி சதாசிவம் நாகேஸ்வரி வளாகத்தில், அபயம் அமைப்பினால் இக்கல்வி மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பகுதியில் கல்வி உதவிகள் குறைவாக உள்ள நிலையில், மாணவர்கள் தங்களது பாடத்திட்டங்களை மேம்படுத்திக் கொள்ள இம்மையம் பெரிதும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பகுதியைச் சார்ந்த ஆரம்பப்பிரிவு, இடைநிலை பிரிவு மாணவர்கள் இம்மையத்தைப் பயன்படுத்தி பயனடையகூடிய வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அபயம் அமைப்பின் சமூக சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக இம்மையம் செயல்படவுள்ளதுடன், வருங்காலத்தில் கூடுதல் வசதிகள், கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் மேற்பட்ட பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அபயம் அமைப்பின் இயக்குனர், உறுப்பினர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜோ. பிரபாகரன், பாடசாலையின் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், தளவாய் பகுதியின் பெற்றோர்களும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான இத்தகைய நிகழ்வு பாராட்டத்தக்கது என கருத்து தெரிவித்தனர்.



















