சீனாவிடமிருந்து இலங்கைக்கு 100 நவீன மின்சார பேருந்துகள்


இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் மாசடைவைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வழங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு பேருந்தின் விலை சுமார் 2,25,000 அமெரிக்க டொலர்கள் எனத் தூதுவர் மேலும் தெரிவித்தார்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரை இன்று (22) சந்தித்து ஆசி பெற்ற போதே சீனத் தூதுவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.