
திருகோணமலை - கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமாக ஆமை முட்டைகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் லங்காபட்டுன நிறுவனத்தினால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சுமார் 117 ஆமை முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருகோணமலை தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரும் ஆமை முட்டைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சேருநுவர வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.












.webp)