இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளது.
நூரிய பகுதியில் சிறுவன் ஒருவன் கொடூரமாக தாக்கப்படுவதாக பிரதேசவாசிகள் சிலர் நூரிய பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சிறுவன் உயிரிழந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் நூரியவத்த பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நூரிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




.jpg)




.jpeg)
.jpg)


