ஜனவரி 15 முதல் 'Govpay' மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம் - இலங்கை போக்குவரத்து பொலிஸ் !



எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர், Govpay மூலம் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்தும் வாய்ப்பு நாடு முழுவதும் வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பு நாடு தழுவிய அளவில், குறித்த திட்டம் முடிக்கப்படும். Govpay மூலம் நிகல்நிலையில் அபராதங்களை செலுத்தலாம். அதிகாரிகளுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. ஓட்டுநர்கள் பொலிஸாருக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் ஒரு குற்றம். நாங்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் செயல்படுகிறோம். எதிர்காலத்தில் பொலிஸ் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாது." என குறிப்பிட்டுள்ளார்.