இலங்கையில் நிகழும் மரணங்களில் 83% தொற்றாத நோய்களினால் ஏற்படுகின்றன.
இவற்றுக்கான பிரதான நான்கு காரணிகளில் ஒன்றாக புகையிலை பயன்பாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கையில் சுமார் 1.5 மில்லியன் (15 லட்சம்) பெரியவர்கள் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.
உலகில் ஒவ்வொரு 6 விநாடிகளுக்கும் ஒரு மரணம் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படுவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற "இலங்கையின் புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகளில் புகையிலை தொழில்துறையின் தலையீடுகள்" என்ற தலைப்பிலான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட வைத்தியர் சஜீவ ரணவீர, 2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் வரிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.









.jpg)



.jpeg)