.jpeg)
2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து முன்னெடுத்து வரும் சோதனை நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட சுமார் 2,500 கிலோகிராமுக்கும் அதிகளவான போதைப்பொருள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்ளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கைக்கும் அதன் பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைச் சட்டத்தின் முன்னிறுத்த பொலிஸார், முப்படைகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாரிய சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சோதனைகளின் போது பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களை அழிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது.
அதற்கமைய கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் மூலம் கைப்பற்றப்பட்ட சுமார் 2,556 கிலோ 164 கிராம் போதைப்பொருட்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. அத்தோடு 2024 ஆம் ஆண்டில் 1,894 கிலோ 512 கிராம் போதைப்பொருட்களும், 2025 ஆம் ஆண்டில் 494 கிலோ 498 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் அழிக்கப்பட்டன.
2026 ஆம் ஆண்டின் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, நேற்றைய தினம் (2) வனாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள உயர் வெப்பநிலையைக் கொண்ட நவீன தகன உலைகளில் வைத்து 170 கிலோ 86 கிராம் ஹெரோயின் மற்றும் 306 கிராம் அபின் போதைப்பொருள் என்பன எரியூட்டப்பட்டன. இந்த அழிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றம், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம்.



.jpg)




.jpeg)
.jpg)


